000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a திருமகள் |
300 | : | _ _ |a வைணவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து வாழும் திருமகள் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a அமிர்தம் வேண்டி தேவர்களும், அசூரர்களும் பாற்கடலைக் கடைந்த தருணத்தில் அதிலிருந்து எண்ணற்ற பொருள்களும், இறைகளும் வெளிவந்தன. அவற்றுள் ஒன்றானவள் திருமகள். செய்யோள் என தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் திருமகள் செல்வ வளத்திற்குரிய பெண் கடவுள் ஆவாள். செந்தாமரை மலரில் வீற்றிருப்பவள். இரு கரங்களிலும் செந்தாமரை மலரைப் பிடித்திருப்பாள். நன்னிமித்தத்திற்கும், வளமைக்கும் குறியீடாக அறியப்படுபவள். குன்னாண்டார் கோயில் மண்டபத் தூணில் காட்டப்பட்டுள்ள திருமகள் தாமரைப் பீடத்தின் மீது அர்த்த பத்மாசனத்தில் இரு கால்களையும் மடக்கி அமர்ந்துள்ளாள். இரு கைகளிலும் தாமரை மலரைப் பிடித்துள்ளாள். திருமகள் பத்ர பூரிம முகப்புடன் கூடிய கரண்ட மகுடம் தரித்துள்ளார். நெற்றியில் தாமங்களுடன் கூடிய நெற்றிப்பட்டை விளங்குகின்றது. காதுகளில் செவிப்பூக்கள், தாடங்கம் என்னும் தோடு அணிந்துள்ளார். கழுத்தில் கண்டிகை, சரப்பளி, மார்பில் சன்னவீரம், கொங்கைகளை மறைத்தவாறு குஜபந்தம் ஆகியன அமைந்துள்ளன. தோள்களில் தோள்மாலை உள்ளது. இடையில் நீண்ட மடிப்புகளுடன் கூடிய பட்டாடையும், கால்களில் பாத கடகமும், பாதங்களில சதங்கையும் அணிந்துள்ளார். |
653 | : | _ _ |a திருமகள், யானைத் திருமகள், இலக்குமி, செய்யோள், ஸ்ரீதேவி, திருமறு, குன்னாண்டார் கோயில், குன்றக்குடி, குன்றக்குடித் தேவர், குன்றக்குடி நாயனார், குன்றப்பெருமாள், குன்றாண்டார், புதுக்கோட்டை குடைவரைகள், சிவன் குடைவரை, கீரனூர் குடைவரைகள், குன்னாண்டார் கோயில் சிற்பங்கள், சிவன் கோயில் சிற்பங்கள், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a குன்னாண்டார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c குன்னாண்டார் கோயில் |d புதுக்கோட்டை |f கீரனூர் |
905 | : | _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 10.58168901 |
915 | : | _ _ |a 78.89790773 |
995 | : | _ _ |a TVA_SCL_000393 |
barcode | : | TVA_SCL_000393 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |